“சேவை துறையை நம்பியே இந்தியாவின் வெற்றி..”
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் குறித்து அண்மையில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். நிலையான வளர்ச்சி தேவையெனில் சேவைத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். நிலையான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றின் தேவையும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். வருடாந்திர உலக வங்கி மாநாட்டில், பேசிய அவர், உற்பத்தித் துறையை விடுத்து சேவைத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். குறைவான தேவை மட்டுமே உற்பத்தித்துறையில் இருப்பதாகவும் , நமக்கு போட்டியாக சீனா, வியட்நாம், இந்தோனேசியா, மெக்சிகோ, உள்ளிட்ட பகுதியில் மலிவு விலையில் தொழிலாளிகள் கிடைப்பதையும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாகவும், உற்பத்தித்துறை கடினமாக இருப்பதாகவும், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே நேரம் சேவை மற்றும் சேவை சார்ந்த துறைகள் அதிக மதிப்பு கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் சுகாதார சேவை சார்ந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு பணிகளுக்கும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும்ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தற்போதைய வேலை இருப்பு மற்றும் வருங்கால வேலைவாய்ப்பை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே திறமை உள்ள மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வருங்கால வேலை வாய்ப்புகளுக்கு தகுந்தபடி உரிய பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் என்றார்.