பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. – எண்ணெய் விலை உயர்வு..!!
உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடான இந்தோனேசியாவின் திடீர் ஏற்றுமதித் தடையானது எண்ணெயின் விலையை உயர்த்தக்கூடும்.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 8.3 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட 40% பங்கைக் கொண்டுள்ளது.
அத்துடன் பாமாயில் மற்றும் அதிலிருந்து சோப்புகள், ஷாம்புகள், பிஸ்கட்கள் மற்றும் நூடுல்ஸ் போன்ற தினசரி நுகர்வுக்கான பல பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 12 மாதங்களில், பாமாயில் விலை 50% உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், உக்ரைன் போருக்கு மத்தியில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகமும் விலை நிலையற்றதாகவே உள்ளது.
ஏப்ரல் 28 முதல் பாமாயிலின் ஏற்றுமதி தடையை கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியா அறிவித்தது.