நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.1 % வீழ்ச்சி – தேசிய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் !
நாட்டின் உற்பத்தி வளர்ச்சித்துறை விகிதம் குறைந்திருக்கிறது என்று தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தொழில் துறை இந்த ஆண்டு 77.63 சதவீதம் ஆகப் பதிவு செய்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 3.1 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
அதேவேளையில் நாட்டின் சுரங்கத் தொழில் 8.6 சதவீதம் ஆகவும், மின் உற்பத்தித் துறை 0.9 சதவிகிதமும் அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய நான்கு மாதங்களில் தொழிற்சாலை உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐபி வளர்ச்சி இந்த ஆண்டு மே முதல் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது, முக்கியமாக குறைந்த அடிப்படை விளைவு காரணமாக.தொழில்துறை உற்பத்தி செப்டம்பர் 2020 இல் மீட்சி கண்டது, செப்டம்பர் 2019 இன் பெருந்தொற்று நோய்க் காலத்துக்கு முந்தைய அளவை விஞ்சிவிட்டது என்று தரவுகள் காட்டியது. 2020 செப்டம்பரில் ஐஐபி ஒரு சதவீதம் வளர்ந்தது. கோவிட் பாதிப்புகளால் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொழில்துறை உற்பத்தி 18.7 சதவீதம் சரிந்து ஆகஸ்ட் 2020 வரை எதிர்மறை வளர்ச்சி விகிதத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.