மீளாத சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் ஆகஸ்ட் 16ஆம்தேதி லேசான உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137 புள்ளிகள் அதிகரித்து 65,539 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 30 புள்ளிகள் உயர்ந்து 19,465 புள்ளிகளாக இருந்தது. பங்குச்சந்தைகள் துவக்கத்தில் பயங்கரமாக தடுமாறின. கடைசி நேரத்தில் பலரும் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் பங்குச்சந்தைகள் சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறின. UltraTech Cement, Apollo Hospitals, NTPC, இன்போசிஸ்,டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கல் லாபத்தை பதிவு செய்தன.Tata Steel, Adani Ports, Hindalco Industries, HDFC Lifeஉள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.வங்கிகள் மற்றும் உலோகத்துறை பங்குகளைத்தவிர்த்து மற்ற அனைத்து பங்குகளும் பச்சையில் முடிந்தன. ஆட்டோமொபைல்,தகவல் தொழில்நுட்பம், மருந்து நிறுவன பங்குகள் அரைமுதல் 1 விழுக்காடு உயர்வை சந்தித்தன. Cochin Shipyard, Ashok Leyland, Lupin, Jammu & Kashmir Bank, Shankara Building Products, Escorts Kubota, Oil India, L&T, TV18 Broadcast, Hindustan Construction Company, SML ISUZU, Salzer Electronics, Voltamp Transformers ஆகிய நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது. 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 495 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலைகிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200ரூபாய் அதிகரித்து 76ஆயிரத்து 200ரூபாயாக உள்ளது.இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டாயம் சேர்க்க வேண்டும். மேலும் செய்கூலி,சேதாரம் வேறு உள்ளன. இவை கடைக்கு கடை மாறுபடும்,இவற்றையும் சேர்த்தால்தான்,நாம் கையில் இருந்து எவ்வளவு ரூபாய் ஒரு சவரன் தங்கத்துக்கு தருகிறோம் என்பது தெரியவரும் என்பதை மறந்துவிடக்கூடாது.