தள்ளாடும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
மார்ச் 2022 ஆம் காலாண்டில் மத்திய வங்கிகளின் பணவீக்கக் கொள்கை நிலை, பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தைகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் நிலைமையைத் கட்டுக்குள் கொண்டு வைக்கப் போராடின.
இதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்ந்தது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 43,399 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியர்கள் உள்பட 13 சதவீதத்தினர் வேலையிழந்துள்ளனர்.
மே மாதத்தில் 6 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 2000 பேரை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றன. குறிப்பாக unacademy, BYJU’S Vedantu போன்ற நிறுவங்களில் இருந்து பெருமளவிலான ஊழியர்கள் பணியிழந்தனர். ஜூன் மாதத்தில் மட்டும் 2,261 பேர் வேலையிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Healthcare உள்பட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் ஊழியர்களை வீட்டுக்கு அதிகபட்சமாக அனுப்பிய நிறுவனங்கள். இவற்றில் MFine நிறுவனம் அதிகபட்சமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. Cars24 நிறுவனமும் 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
2020ஆம் ஆண்டு மட்டும் சுமார் 13ஆயிரம் பேர் வேலையிழந்தனர். அவற்றுடன் ஒப்பிடும்போது 2021,22ஆம் ஆண்டுகள் எவ்வளவோ பரவாயில்லை.