பணவீக்கம் குறைந்து வருகிறதாம்..
ரிசர்வ்வங்கியின் ஆளுநராக திகழ்பவர் சக்தி காந்ததாஸ்,இவர் வெள்ளிக்கிழமை பணவீக்கம் பற்றி பேசியுள்ளார். அதாவது.இம்மாதமான செப்டம்பரில் இருந்து இந்தியாவில் பணவீக்கம் குறையத் தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார்.தக்காளி, பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள்,சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.இந்தூரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய சக்தி காந்ததாஸ்,ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்கம் என்பது மிக அதிக அளவாக இருப்பதாக கூறினார்.ஏற்கனவே தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியிருப்பதாக கூறிய அவர், காய்கனிகள்,மற்றும் அடிப்படை தேவைகளான சமையல் பொருட்கள் விலை படிப்படியாக குறையும் என்றார்.
பொதுமக்களுக்கு அன்றாட வாழ்வில் என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் சரியாக மக்களுக்கு கிடைக்க மத்திய அரசு போதிய முயற்சிகளை செய்துவருகிறது என்றார். குறிப்பாக அரிசி விலையை கட்டுப்படுத்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சக்தி காந்ததாஸ்,சமையல் எரிவாயு விலையும் குறைந்திருப்பது மக்களுக்கு பலன்தரும் என்றார். அரசு தரவுகளின்படி சில்லறை பணவீக்கம் என்பது ஜூலையில் 7.44%ஆக இருக்கிறது.இது கடந்த 15 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சில்லறை பணவீக்கம் உண்மையில் அதிகளவில் ஜூலை மாதம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டிய சக்தி காந்ததாஸ், ஜூலையில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று கருதினோம் ஆனால் இவ்வளவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் வியப்பளித்ததாகவும் குறிப்பிட்டார்.இதற்கு முக்கிய காரணியாக தக்காளி இருந்ததாகவும் சக்திகாந்ததாஸ் குறிப்பிட்டு பேசியிருந்தார்.