பெரிய டீல அசால்ட்டா முடிச்ச இன்போசிஸ்..
உலகளவில் பிரபலமாக உள்ள வங்கிகளில் ஒன்றான டான்ஸ்க் வங்கியின் டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் அண்மையில் சந்தைக்கு வந்தது.இதன் மதிப்பு 454 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதாவது அடுத்த 5 ஆண்டுகள் இந்த டிஜிட்டல் பணிகளை எந்த நிறுவனம் செய்யும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதனை இன்போசிஸ் நிறுவனம் தற்போது தட்டிச்சென்றுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் கூட 3 ஆண்டுகள் அதிகப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பிரிட்டனின் பெரிய டீலை டிசிஎஸ் நிறுவனம் 1.9 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியிருந்த சில நாட்களுக்குள் இன்போசிஸ் நிறுவனமும் தனது பங்குக்கு பெரிய டீலை முடித்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்புதான் பீ.பி. நிறுவனத்தின் 1.5 பி்ல்லியன் டாலர் டீலை இன்போசிஸ் கைப்பற்றியது. புதிதாக கைப்பற்றப்பட்டுள்ள டீலின் மூலம் பெங்களூருவில் தரவு மையத்தையும் இன்போசிஸ் எடுத்துக்கொள்ள இருக்கிறது. 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நிதி நிறுவனங்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றியிருந்த போது பெரிய பொருளாதார சரிவு நேரிட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. அதிநவீன ஏஐ தொழில்நுட்பங்களை இன்போசிஸ் நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது.எச்சிஎல் மற்றும் டாடா நிறுவனங்கள் வரும் 12ஆம் தேதி தங்கள் நிதி நிலைகளை வெளியிட இருக்கின்றனர். இன்போசிஸ் நிறுவனம் 4 முதல் 7 விழுக்காடு வருவாய் மட்டுமே அண்மையில் பதிவு செய்திருந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வருவாயாகும்.விப்ரோ நிறுவனத்தின் முடிவுகளும் 1 முதல் 3 விழுக்காடு சரிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் வரையிலான காலாண்டின் முடிவுகள் பெரிய ஐடி நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்து வருகின்றன.