ஜூலை 18-ல் இன்போசிஸின் முதல் காலாண்டு முடிவு..
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் மிக முக்கிய நிறுவனமாக வலம் வருவது இன்போசிஸ். இந்த நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி ஆலோசனை நடத்த இருக்கிறது. அப்போது அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் மற்றும் அதன் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. இதே இன்போசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 30 விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. 7 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பணம் லாபமாக மட்டுமே கிடைத்ததாகவும் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 37 ஆயிரத்து 923 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 1 விழுக்காடு அதிகமாகும். 1 முதல் 3 விழுக்காடு வரை வருவாய் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக செலவுகள் மட்டும் 20 முதல் 22 %வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் வரை 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வேலைகளை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது இதில் 44 விழுக்காடு அளவுக்கு வேலைகள் புதியவையாகும். 2024 நிதியாண்டில் மட்டும் அந்நிறுவனம் கையில் எடுத்த வேலைகளின் அளவு மட்டும் 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இது அந்நிறுவன வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.