தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவு செய்ய அறிவுறுத்தல்
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமலுக்கு வந்த பிறகு, போலி பதிவுகளும் அதிகரித்துள்ளது. இது குறித்து ஆய்வு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது, போலி பதிவுகளை கண்டறிய புதிய நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை 11,140 போலி ஜிஎஸ்டி பதிவுகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் தேதி இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க நிதியமைச்சர் பணிகளை தொடங்கியுள்ளார். அடையாள திருட்டு உள்ளிட்டவை குறித்தும் இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மிகவும் அதிக அபாயம் உள்ள சில பதிவுகளுக்கு ஆதார் எண்ணுடன் ஓடிபி இணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லர்னிங் ஆகிய நுட்பங்களை பயன்படுத்த நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.