அமெரிக்காவில் கடன் விகிதம் உயர்வால் தொடரும் சிக்கல்
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் அமெரிக்க பெடரல் ரசிர்வ் அனைத்து வகையான கடன்களின் மீதான வட்டிகளையும் கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துள்ளது.
சொந்த நாட்டிலேயே பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அந்த நாட்டில் சர்ச்சை எழுந்தது. ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 15 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரைத் தான் வேலைக்கு சேர்த்துள்ளனர்.
நிதிநிலை சிக்கலை சரி செய்ய பெடரல் ரசிர்வ் முயற்சி செய்து வந்தாலும் வேலைவாய்ப்பு அந்த நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்க புள்ளி விவரங்களின் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மேலும் அமெரிக்க காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைக்க பைடன் திணறுகிறார் என்றும் பரவலாக கருத்து நிலவுவதால் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து வருகிறது.
வேலைவாய்ப்புக்கு ஆட்களை எடுக்கும் எண்ணிக்கையே நாட்டின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது
இது ஒருபுறம் இருக்க நல்ல நிறுவனத்தில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடந்தாலும் தகுதியான பணியாளர்கள் கிடைப்பதில்லை என்ற சர்ச்சையும் தொடர்கிறது. முன்பெல்லாம் 10 பேரை நேர்காணல் செய்து அதில் 5 பேரை ஷார்ட்லிஸ்ட் செய்து, 3 பேரை பணியில் அமர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 பேரில் 3 பேரை தேர்வு செய்யவேண்டியுள்ளது என்று நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது