கடன்கள் மீதான வட்டி விகதம் மாறாதாம்..
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே மாதம் முதல் பல கட்டங்களில் கடன்கள் மீதான வட்டி விகதித்தை உயர்த்தி வருகின்றது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கை கூட்டத்தை வரும் நாட்களில் நடத்தி வரும் 8ஆம் தேதி அறிவிப்பை வெளியிட இருக்கின்றது. இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கடன் விகிதங்களே தொடர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விரும்புவதாக தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. பணவீக்கம் மேலும் குறைய வேண்டும் என்பதற்காக புதிதாக எந்த வரியோ வட்டியோ போடாமல் தற்போதைய நிலையே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு வரும் 6முதல் 8 ஆம் தேதி வரை இது தொடர்பாக ஆலோசிக்க இருக்கின்றனர். கடந்த முறை நடந்த எம்பிசி எனப்படும் நிதி கொள்கை கூட்டத்தில் தற்போதைய கடன் விகிதமான 6.5 விழுக்காடில் மாற்றம் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் பணவீக்கம் என்பது கடந்த ஏப்ரலில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.7 விழுக்காடாக இருந்தது.மேமாதத்தின் தரவுகள் நிச்சயம் ஏப்ரலை விட குறைவாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.ஜூன் 12ஆம் தேதி இதற்கான தரவுகள் வெளியாக இருக்கின்றன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் நடவடிக்கை காரணமாக மக்களிடம் பணப்புழக்கமும்,முதலீடும் அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கம் நிச்சயம் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையும், பயிர்களின் விளைச்சலும் இந்திய பொருளாதாரத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் வரை தற்போதைய வட்டி விகிதம் குறைய வாய்ப்புகள் குறைவு என்பதே நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.