தங்க முதலீட்டுக்கு வட்டி குறைப்பு..
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் இருந்தாலும் குறிப்பாக தங்கத்துக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தங்கத்தின் மீதான முதலீட்டு ஆதாயத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. நீண்டகால மூலதன ஆதாய சலுகைகள் பெறும் காலம் 36 மாதங்களுக்கு பதிலாக 24 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் LTCG என்ற வரியும் 12.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இதற்கான வரி 20%ஆக இருந்தது. பட்ஜெட்டில் இதற்கான வரி குறைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நேற்று முதலே அமலக்கு வந்துள்ளது. LTCG வரி வசூலிப்பில் ஏற்கனவே இருந்த 1 லட்சம் ரூபாய்க்கு பதிலாக இனி 1.25லட்சம் ரூபாய் வரை வரி சலுகை பெறலாம். தங்கம் சார்ந்த பரஸ்பர நிதிக்கும் இனி வருமான வரி கட்டவேண்டியுள்ளது. நீண்டகால முதலீடு செய்பவர்களுக்கு LTCG வரி 10 முதல் 12.5 விழுக்காடாகவும், இது பங்குச்சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.