AIநுட்பம் குறித்து சுந்தர்பிச்சை தரும் ருசிகர அப்டேட்ஸ்…
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அதி தீவிரம் காட்டி வரும் சுந்தர் பிச்சை, தனது குழந்தைகளுக்கு கல்வியில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். கூகுள் லென்ஸ் பயன்படுத்தி சுந்தர் பிச்சையின் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதாகவும் தெரிவித்தார். சில நேரங்களில் சுந்தர்பிச்சையின் மகன் தன்னிடம், கணக்கு பாடங்களில் உதவி கேட்பார் என்றும், ஆனால் சற்று சோம்பேறித்தனம் பட்டு, கூகுள் லென்ஸில் உதவி கேட்போம் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆரம்ப நிலையில் இருப்பதாக கூறியுள்ள சுந்தர் பிச்சை , செயற்கை நுண்ணறிவு நுட்பம் மிகப்பெரியது என்றார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மகிழ்வை தரும் அளவுக்கு சிறப்பானது என்றும் சுந்தர் குறிப்பிட்டார். மின்னஞ்சல், பிரவுசர் உள்ளிட்டவற்றை தங்கள் நிறுவனம் முதலில் கண்டுபிடிக்கவில்லை என்றபோதிலும் அதில் சிறப்பாக விளங்குவதைப்போலவே செயற்கை நுண்ணறிவு நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்ப உலகில் அதிக போட்டி இருக்கும் என்று குறிப்பிட்ட அவர்,புதுமைகளை தொடர்ந்து புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பங்கள் பல விஷயங்களை வேகமாக மாற்றியுள்ளதாகவும் இது தமக்கு பெரிய ஆச்சர்யத்தை தரவில்லை என்றும் சுந்தர் பிச்சை தனது நேர்காணலில் தெரிவித்தார்.