சர்வதேச காஃபி விலை உயர்வு எதிரொலி ! பிரேசிலை விட்டு ஆப்பிரிக்காவுக்குத் தாவும் வணிகர்கள் !
கப்பல் போக்குவரத்து கட்டண விலை உயர்வு, உர விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட பிரச்சனைகளால் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காஃபி விலையை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது பிரேசில். மார்ச் மாதம் டெலிவரியான அராபிகா காஃபி கொட்டையின் விலை நியூயார்க்கில் ஒரு பவுண்ட் 2.23 டாலராக உயர்ந்தது, இது அக்டோபர் 2014 பிறகு உச்ச பட்ச விலையாகும்.
அராபிகா காபி கொட்டையின் விலை கடந்த ஆண்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஸ்டார்பக்ஸ் கார்ப் மற்றும் பீட்ஸ் காபி மற்றும் டீ இங்க் ஆகியவை இந்த வகையான உயர்தர காபி கொட்டைகளுக்கு ஆதரவாக உள்ளன. பிரேசில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததும், நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் நுகர்வோர் பணவீக்கம் 30 வருடங்கள் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பது இதற்கு மற்றுமொரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
2021ல் பிரேசிலில் கடும் வறட்சியும், பனிப்பொழிவும், காபி பயிர் அறுவடையை பாதித்தன. இரண்டாம் தர அராபிகா சப்ளை செய்யும் கொலம்பிய காபி செடியில் உருவாகும் நோய்களையும் அங்கு அதீதமாய் பெய்யும் மழையையும் கண்டு அஞ்சுகின்றனர் கொலம்பியா மக்கள். உர விலை ஏற்றம், ஏற்றுமதி செலவினம் முதலியவை பிரேசிலில் இருந்து காபி கொட்டைகளை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யும் விலையில் பெரும் பங்கு ஆற்றுகின்றன, அதனால் ஏற்றுமதியாளர்கள் இதற்கு மாற்றாக ஆப்பிரிக்காவை எண்ணுகின்றனர். வானிலை தொடர்ந்து சாதகமாக இல்லாத நிலையில் பன்னாட்டு காஃபி விலை தொடர்ந்து உயரும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.