சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு ! வர்த்தகர்கள் உற்சாகம் !
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கொண்டுள்ளது, சென்ற மே மாதத்திற்கு பிறகு நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்றம் கண்டது. நவம்பர் 10ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1866 டாலராக இருந்தது. நவம்பர் 11ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1863 டாலராக குறைந்தது. மே மாதத்திற்கு பிறகு தங்கத்தின் விலை அக்டோபர் மாதம் தான் உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்காவில் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.2 சதவீதமாக இருந்ததால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களும், வர்த்தகர்களும் உற்சாகமாக உள்ளனர். சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலை இந்த மாதத்தில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று கொல்கட்டா, டில்லி, பெங்களூரு, மற்றும் திருவனந்தபுரம் போன்ற பல நகரங்களில் தங்கத்தின் விலை தோராயமாக 10 கிராமிற்கு 700 ரூபாயிலிருந்து 850 ரூபாய் வரை உயர்ந்து இருந்தது. இன்றும் அதே போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு தோராயமாக 47,350 ரூபாயாகவும் இருபத்தி நான்கு கேரட்டின் விலை 10 கிராமிற்கு 48,350 ஆக இருக்கிறது. தந்தேராஸ் மற்றும் தீபாவளிக்கு பிறகு இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அமெரிக்காவின் பணவீக்க உயர்வுக்குப் பிறகு தங்க சந்தையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.