ஹாப்பி நியூஸ்., மந்த நிலைக்கு வாய்ப்பு குறைவாம்..
உலகளவில் போர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உள்ளிட்ட காரணிகள் இருந்தபோதும் ரெசஷன் எனப்படும் மந்த நிலைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் டிசியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகளாவிய வளர்ச்சியின் அளவு குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி 2024-ல் 3.2 விழுக்காடு அளவே இருக்கும் என்றும், 2025-லும் இதே அளவு இருக்கும் என்றும் கணித்திருக்கிறது. அமெரிக்காவில் வலுவான பொருளாதார நிலை மற்றும் சில நாடுகளில் சந்தைகள் வேகமாக வளர்ந்து வருவதும், விலைவாசி வேகமாக குறைந்து வருவதும் ,ஐரோப்பாவின் வளர்ச்சி குறைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய இடங்களில் வளர்ச்சி குறைந்திருந்தாலும் ஸ்பெயின், போர்ச்சுகல்,ஸ்பெயின்,பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு செங்கடலில் கப்பல்கள் வழித்தடம் மாற்றம், ஹமாஸ் இஸ்ரேல் இடையேயான மோதல் உள்ளிட்டவையும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் ஆகியவையும் பல நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்பட்டால் மத்திய வங்கிகள் கடன்கள் மீதான வட்டி வவிகிதத்தை தொடர்ந்து அதிக அளவிலேயே இருக்கும் என்றும் அது உலகளாவிய வளர்ச்சியை தடுக்கும் காரணியாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர்.