அறிமுகமானது ஏர் பைபர்..
கடந்த 28 ஆம் தேதி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவன ஆண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் வரும் 19ஆம் தேதி முதல் ஏர் பைபர் திட்டத்தை தொடங்கி வைப்பதாக அறிவித்தார்.அதன்படியே 19ஆம் தேதி சந்தைக்கு இந்த பொருள் அமலுக்கு வந்துவிட்டது.இந்தியாவில் கண்ணாடி இழை வழி இணைய சேவையான ஜியோ ஃபைபருக்கு 1 கோடி சந்தாதாரர்கள் நாடு முழுக்க உள்ளனர்.மொபைலை விட 10மடங்கு அதிகபட்சமாக அதாவது 280 ஜிபி அளவுக்கு மக்கள் ஜியோ பைபரை பயனப்டுத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் 15 லட்சம் கிலோமீட்டருக்கு ஒயர்கள் இணைத்தும் எல்லா கிராமபுறங்களுக்கும் பைபர் சேவையை ஜியோவால் கொண்டுசேர்க்க இயலவில்லை. இதற்கு தீர்வாகத்தான் ஜியோ ஏர் ஃபைபர் வந்துள்ளது. சிம்கார்டை போடும் வகையில் தயாராகியுள்ள இந்த இயந்திரம் 5ஜி சேவையை டவரில் இருந்து பெற்றுவிடும். 599 ரூபாய் பிளானில் 30எம்பிபிஎஸ் வேகத்தில் இணைப்பு கிடைக்கும். 899 ரூபாய் பிளானில் 100 எம்பிபிஎஸ்,1499 ரூபாய் திட்டத்தில் 300 எம்பிபிஸ்,2,499 திட்டத்தில் 500எம்பிபிஎஸ் மற்றும் 3999ரூபாய் திட்டத்தில் 1ஜிபிபிஎஸ் வரை இந்த பெட்டிகள் வேகம் எடுக்கும். வேறு எந்த தொகையும் செலுத்தாமல் வைஃபை ரவுட்டர் மற்றும் 4கே செட்டாப்பாக்ஸ் இந்த இணைப்புடன் கிடைத்துவிடும் இதற்கு பணம் ஏதும் செலுத்தத்தேவையே இல்லை.