ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடா?…
அபுதாபி முதலீட்டு அமைப்பான அடியா,ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவான ரீட்டெயில் வென்சர்ஸ் நிறுவனத்தில் 4 ஆயிரத்து966 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மூலதன அடிப்படையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் நான்காவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது.இந்த தொகை என்பது ரிலையன்ஸின் 0.59% பங்குகள் மட்டுமே. ரிலையன்ஸ் ரீட்டெயிலின் மொத்த பங்கு விலை என்பது 8லட்சத்து 381 கோடி ரூபாயாக உள்ளது. இந்திய சில்லறை வர்த்தக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமையும் என்று அடியா நிறுவனம் குறித்து ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் வலுவான வளர்ச்சியை கொண்டுள்ளதாகவும்,அசுரவேகத்தில் மதிப்பு உயர்ந்து வருவதாகவும், சந்தையில் நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியைகும் கொடுக்க இந்த முதலீடுகள் உதவும் என்றும் அடியா தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் மட்டும் 26 கோடிய 70 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக அந்நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 18,500 கடைகள் மற்றும் டிஜிட்டல் பிளாட்பார்ம்களை ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் திகழ்கிறது.