முதலீட்டாளர்கள் அதிருப்தி…
கடந்த 2 மாதங்களில் சில்லறை முதலீட்டாளர்களாக சந்தைக்குள் வந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. செப்டம்பரில் உள்ளே வந்தவர்கள், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் அமெரிக்க பாண்டுகளின் வளர்ச்சி காரணமாக இந்திய சந்தைகள் பெரிய சரிவை கண்டன. தேசிய பங்குச்சந்தை தரவுகளின்படி, எந்த வித முன் அனுபவமும் இல்லாத முதலீட்டாளர்கள் நேரடியாக ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துவருவதாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமும் நஷ்டமும் மட்டுமே மிஞ்சியுள்ளது. குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது சந்தையை அலசி இருப்போருக்கு தற்போதைய சூழல் எளிதாக புரியும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் நிதிகள் கடந்த மார்ச் மாதம் இருந்ததைவிடவும் சற்று உயர்ந்தேதான் காணப்படுகிறது. மிட்கேப் வகை நிதிகள் 40% வரை உயர்ந்திருக்கின்றன.ஸ்மால்கேப் பங்குகளோ 44%ஏற்றம் கண்டுள்ளன. மார்ச் மாதத்திற்கு பிறகு முதலீடு செய்தவற்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நேரடியாக ரீட்டெயில் வணிகம் செய்த 21,000கோடிரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக 27,000கோடி ரூபாய் நஷ்டமாகியுள்ளது. பெரிய பங்குகளுக்கு பதிலாக சிறு பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பாதிப்பு மிகமிகக் குறைவு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் எப்போதும் 8 முதல் 10%வரை திருத்தம் நடைபெறும் என்பதை எப்போதும் மனதில் வைத்து முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாகவும் சந்தையில் சிறிய பாதிப்பு இருப்பது உண்மைதான் என்பதும் நிபுணர்கள் கூறும் முக்கிய கருத்தாகும். நிதி இழப்பை சமாளிக்க நீண்ட காலத்துக்காக முதலீடு செய்ய வேண்டும் என்பதும் ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது