மகிழ்ச்சியில் துள்ளி குதித்த முதலீட்டாளர்கள்!!!
இந்திய பங்குச்சந்தைகள் ஜூன் 21 ஆம் தேதி உயர்வில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63,523 என்ற உச்சத்தில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 18,856 புள்ளிகளாக இருந்தது. சாதாரணமாக தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் சற்று நேரத்தில் சூடுபிடித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தையில் மட்டும் புதிய உச்சத்தை தொட சில புள்ளிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. Power Grid Corporation, ONGC, HDFC Bank, Adani Ports ஆகிய துறை பங்குகள் லாபத்தை தந்தன. JSW Steel, Hindalco Industries, M&M, Divis Laboratories உள்ளிட்ட துறை பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஆற்றல் துறை பங்குகள் 1 விழுக்காடும்,எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் அரை விழுக்காடும் அதிகரித்தன. Zydus Lifesciences, KPI Green Energy, Ujjivan Financial Services, Tata Motors, Power Finance Corporation, Rico Auto Industries, Exide Industries, உள்ளிட்ட 200 பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கத்தின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 5 ஆயிரத்து 505 ரூபாய் ஆக குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 240 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 10 காசுகள் குறைந்து 76 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 76 ஆயிரத்து 500 ரூபாயானது. இங்கே குறிப்பிட்டுள்ள தங்கம் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்க்க வேண்டும், ஆனால் தங்கத்தின் செய்கூலி,சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் மாறும் என்பதால் உங்களுக்கு கைராசியான, சேதாரம் குறைவாக உள்ள கடைகளில் நகைகளை வாங்குவது சிறந்தது.