அறிமுகமானது ஐபோன் 15..
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 ரக செல்போன்களை செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு 10.30மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.. மொத்தம் 4 வகைகளில் அதாவது ஐபோன் 15,15 பிளஸ், புரோ மற்றும் புரோ மேக்ஸ் ரகங்களில் இந்த செல்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆப்பிளின் புதிய வாட்ச்கள் மற்றும் ஏர்பாட்ஸ் புரோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட டைப்சி சார்ஜிங் வசதி ஐபோன் 15 சீரிசில் அறிமுகமாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல் பிரி ஆர்டர் பெறப்படுகின்றன. இந்தியாவில் வரும் 22ஆம் தேதி முதல்தான் ஐபோன் 15,மற்றும் 15 பிளஸ் ரக போன்கள் கிடைக்க இருக்கின்றன. 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் கூடிய ஐபோன் 15 ரக போன்களின் விலை 79,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 15 பிளஸின் விலை 89,900 ரூபாயாக உள்ளது. 15 ரகத்தில் புரோ ரக போன்களின் தொடக்க விலை 1லட்சத்து 35ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐபோன் புரோ மேக்ஸ் ரக போன்களின் விலை 1லட்சத்து 59,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9-இன் விலை 41,900 ரூபாயாகவும்,வாட்ச் எஸ் இயின் விலை 29,900ரூபாயாக உள்ளதுஇந்த வாட்ச்களும் வாடிக்கையாளர்களுக்கு வரும் 22ஆம் தேதி கிடைத்துவிடும்.