ஐபோன் 15 புதிய தகவல்!!!
டாடா நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஏற்கனவே விஸ்ட்ரான்,பாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.இந்த வரிசையில் தற்போது டாடா குழுமமும் இணைந்துள்ளது. உலகில் மாறி வரும் சர்வதேச சூழல்கள் காரணமாகவும் கொரோனா காலகட்டத்தில் உற்பத்தியை பரவலாக்கியதாலும் இந்தியாவில் உற்பத்தி சிறப்பாக இருப்பதாலும் இந்தியாவில் அதிக செல்போன்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது இந்தியாவுக்கு இறக்குமதியாகி வருவதற்குள் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. டாடா குழுமம் ஐபோன் 15 ஐஉற்பத்தி செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி விற்பனை மையத்தை அண்மையில் டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கி வைத்தது. இந்த நிலையில், ஆப்பிள் செல்போன்கள் உற்பத்தியை டாடா குழுமம் பெறும்பட்சத்தில் அது வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதால் இந்திய அரசு அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் செல்போன் உற்பத்தி மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.