ஐ.பி.எல் போட்டிகளுக்கு வரி விதிக்க முடியாது – ஐ.டி.ஏ.டி அதிரடி தீர்ப்பு
நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ “ஐ.பி.எல்” மீதான வரிவிதிக்கும் அமைப்புடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. நவம்பர் 2 உத்தரவில் தீர்ப்பாயமானது, பிசிசிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது,”ஐபிஎல் போட்டித்தொடரில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கம் அப்படியே உள்ளது. எனவே அதன் வருமான வரிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்ற பிசிசிஐயின் கோரிக்கையை உறுதி செய்தது.
வருமான வரிச் சட்டத்தின் 12A பிரிவின் கீழ் ஐபிஎல் மூலமாகக் கிடைக்கும் வருவாய் வரிவிலக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று வருமான வரி தீர்ப்பாயம் 2017 – 17 ஆண்டு விளக்கம் கேட்டு மூன்று நோட்டீஸ்களை அனுப்பியது. அதற்கு எதிராக மும்பை வருமான வரி தீர்ப்பாய பெஞ்சை பிசிசிஐ அணுகியது.
ரவி சூட் மற்றும் துணைத்தலைவர் பிரமோத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒரு விளையாட்டுப் போட்டியை பிரபலமாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால், ஸ்பான்சர்ஷிப் மற்றும் பெரும் நிதி திரட்டும் நோக்கில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் அடிப்படை நடவடிக்கை தன்மை பாதிப்படையவில்லை” என்று கூறி வருவாய்த்துறையின் வாதத்தை நிராகரித்தது.
வருமான வரி சட்டத்தின் 12a பிரிவின்கீழ் பதிவு செய்ய மறுத்தது, உண்மையிலும், சட்டத்திலும் வருவாய்த்துறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் கிரிக்கெட் அமைப்பு வாதிட்டது, வருமான வரி சட்டம் 12 A குறிப்பிடுவது என்னவென்றால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் அறக்கட்டளை முதன்மை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை குறிப்பிடுகிறது.