IPO லிஸ்ட் காலம் பாதியாக குறைப்பு..
ஒரு நிறுவனம் தனது வணிகத்தை,வியாபாரத்தை பெரிதாக்க நினைத்தால் செய்யும் பிரதான பணிகளில் ஒன்று பங்குச்சந்தைகளில் பங்குகளை வெளியிட்டு அதற்கு நிகரான பணத்தை திரட்டுவது தான். அதற்கு அந்நிறுவனங்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் IPO தான். இந்நிலையில் ஆரம்ப பங்குகள் மூலம் நிதி திரட்டப்பட்ட அடுத்த 3 முதல் 6 நாட்களுக்குள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட வேண்டும். இப்படி பட்டியலிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் சிக்கல்கள் நிலவுகின்றன. இதனை பாதியாக குறைக்க இருப்பதாக பங்குசத்தை மற்றும் பரிவர்த்தகனை அமைப்பான செபி கூறியிருக்கிறது. இவ்வாறு லிஸ்டிங் காலத்தை குறைப்பதன் மூலம் முதலீட்டாளர் மற்றும் நிதி திரட்டுவோர் இருவருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் பணத்தை நிறுவனங்கள் உடனடியாக எடுத்து தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு யூபிஐ மூலம் பணத்தை முதலீடு செய்யும் முறையை பங்குச்சந்தை அமைப்பான செபி அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஐபிஓ வெளியிட்ட 3 நாட்களுக்குள் பங்குகள் பட்டியலிடப்படும் என்பது இருதரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.