IPO க்களின் மூலம் இந்த ஆண்டு 1.18 லட்சம் கோடி நிதி திரட்டல் !
இந்த ஆண்டில் இதுவரை 63 காரப்பரேட் நிறுவனங்கள், மெயின் போர்டு ஐபிஓக்களை வெளியிட்டு 1,18,704 கோடியை திரட்டியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டை (26,613 கோடி) விட 4.5 மடங்கு அதிகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னொரு சிறப்பம்சமாக மொத்தம் ரூ 2,02,009 கோடியில் 51 சதவீதம் அல்லது 1,03,621 கோடி மட்டுமே புதிய மூலதன திரட்டல் மற்றும் ரூ 98,388 கோடி மட்டும் விற்பனைக்கான சலுகைகள் மூலம் வந்தவையாகும். பிரைம் டேட்டா பேஸின் அறிக்கையின்படி, 2021ல் இதுவரை 2,02,009 கோடியை பங்குகள் பெற்றுத் தந்தன. இது 2020ல் இருந்த 1,76,914 கோடி ரூபாயை விட அதிகமாகும்
ஒன் 97 கம்யூனிகேசன்ஸ் (Paytm) வெளியீட்டில் 18,300 கோடியும், டெலிவரி செயலியான ஸொமோட்டோ 9,300 கோடிக்கும் அதிகமாக வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு வெளியீட்டு அளவு சராசரியாக 1,884 கோடியாக இருந்தது. வெளியான 59 ஐபிஓக்களில் 36 ஐபிஓக்கள் 10 மடங்கிற்கும் அதிகமான சந்தாவை பெற்றன. அவற்றில் 6 பங்குகள் 100 மடங்குக்கும் அதிகமானலை, அதேநேரத்தில் 8 ஐபிஓக்கள் மூன்று மடங்குக்கு மேல் அதிக சந்தாலை பெற்றன. மீதமுள்ள 15 பங்குகள் 1லிருந்து 3 மடங்கு அதிகமாக சந்தாவைப் பெற்றன.
சில்லறை விண்ணப்பங்களை ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் 12.77 இலட்சமாகவும், 2019ஆம் ஆணடில் 4,05 இலட்சமாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சராசரி சில்லறை விண்ணப்பங்கள் 14.36 இலட்சமாகவும் விற்பனை பதிவானது. க்ளென்மார்க் லைப் சயின்ஸ் (33.95 இலட்சம்),தேவயானி இண்டர்நேஷனல் (32.67 இலட்சம்) மற்றும் லேடண்ட் வியூ (31.87 இலட்சம்) ஆகியவற்றுக்கு அதிக எண்ணிக்கையிலான சில்லறை விண்ணப்பங்கள் வந்துள்ளன.இது ஐபிஓ திரட்டலில் 135 (2020ல் 156)சதவீதம் விற்பனை மூலம் விண்ணப்பித்த பங்குகளின் அளவைக் கொண்டிருந்தது.
இருப்பினும் சில்லறை வணிகத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ 24,292 கோடி அல்லது மொத்த ஐபிஓ திரட்டலில் வெறும் 20 சதவீதம் மட்டுமே. 2020ல் இது 32 சதவீதமாக இருந்தது. 58 ஐபிஓக்களில் 34 வெளியீடுகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்தன. சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமாக 270 சதவீத வருவாயைக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து பாராஸ் டிபெஃன்ஸ் 185 சதவீதமாகவும். லேடன்ட் வியூ 148 சதவீத வருமானத்தையும் அளித்தன.
டிசம்பர் 22 நிலவரப்படி 58 வெளியீட்டில் 40 வெளியீடுகள் வெளியீட்டு விலையை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.முதலீட்டாளர்களின் விற்பனைக்கான சலுகைகள் ரூ 31,704 கோடி. புதிய மூலதனம் ரூ 43,324 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த 8 ஆண்டுகளை விட அதிகம். ஆங்கர் முதலீட்டாளர்கள் கூட்டாக 39 சதவீத வெளியீட்டுக்கு சந்தா செலுத்தினர். அதேசமயம் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மொத்தத்தில் 24 சதவீதத்தில் ஆங்கர் முதலீட்டாளர்களாக ஆதிக்கம் செலுத்தினர். தகுதிவாய்ந்த நிறுவன வாங்குவோர் (ஆங்கர் முதலீட்டாளர்கள் உள்பட) மொத்த தொகையில் 69 சதவீதத்திற்கு சந்தா செலுத்தியுள்ளனர்.
115 நிறுவனங்கள் செபியிடம் தங்கள் சலுகை ஆவணங்களை தாக்கல் செய்ததால் இந்த ஆண்டு சாதனையளவான ஐபிஓ தாக்கல்களை கண்டது. ஐபிஓ வெளியிடுவதற்காக 35 நிறுவனங்கள் இப்போது செபியின் ஒப்புதலைப் பெற்று சுமார் 50 ஆயிரம் கோடியைத் திரட்டுகின்றன. மேலும் 33 நிறுவனங்கள் சுமார் 60 ஆயிரம் கோடியைத் திரட்ட செபியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. மறுபுறம் எஸ்எம்ஈ வெளியீடுகளும் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் 55 வெளியீடுகளில் 727 கோடி ரூபாயை வசூலித்தன. 2020 ஆம் ஆண்டு 27 வெளியீடுகளில் 159 கோடி ரூபாயை பெற்றன.