Savings Account Close செய்யவும் கட்டணம் – அதிர்ச்சி தரும் IPPB..!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி(India Posit Payments Bank) சேமிப்புக் கணக்குகளை மூடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் (India Posit Payments Bank) வங்கியில் ஏராளமானவர்கள் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கும்போது, 2 கணக்குகளையும் மூட முடியும். இந்நிலையில், IPPB பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.
அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்குகளை மூடுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதியின்படி, கணக்கை மூட தனியாக 150 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்றும், இந்த புதிய மாற்றம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இருந்த விதிப்படி, KYC புதுப்பிப்பு இல்லாத டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை ஒரு வருடத்திற்குப் பிறகு மூடினால் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இல்லையெனில், கணக்கை மூடுவதற்கு கட்டணம் கிடையாது. ஏற்கனவே, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் குறிப்பிட்ட ஒரு வரம்புக்கு மேல் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது. இதேபோல் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தும் அதிர்ச்சி அளித்த IPPB தற்போது புதிய விதியை கொண்டு வந்துள்ளது.