சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் ஆதார் அவசியமா?
ஆதார் நம்பர் கூட பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள அதே நேரம் , மற்ற அறிவிப்புகளையும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு வரை சிறுசேமிப்புத் திட்டங்களில் பணம் முதலீடு செய்ய பான்எண்ணைத் தவிர்த்து, பெரிதாக எந்த ஆவணங்களும் தேவைப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இனி சிறுசேமிப்பு செய்தாலும் அதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PPF,sukanya samriddhi yojana, தேசிய சேமிப்பு சான்று ஆகியவற்றிற்கும் இனி ஆதார் கட்டாயமாகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பருக்குள் இந்த திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு ஆதாரை இணைக்காவிட்டால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அந்த கணக்குகள் முடக்கப்படும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு பான் எண்ணை 2 மாதங்களுக்குள் தரவேண்டும்,10 ஆயிரம் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கும் இனி பான் எண்ணை காட்டவேண்டியது அவசியமாகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஆதார் மற்றும் பான் எண்கள் அளிக்கப்படாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் தனது சுற்றறிக்கையில் அறிவித்துள்ளது.