அமெரிக்கா தான் காரணமா?
செப்டம்பர் 21ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 570 புள்ளிகள் சரிந்தன,66230 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 19,742 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்ததும் இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது தகவல் தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல்,நிதி சேவை நிறுவனங்கள்,வங்கிகள் ஆகியன பெரிய பாதிப்புகளை சந்தித்தன.ஆற்றல், ரியல் எஸ்டேட், எரிவாயு,உலோகத்துறை பங்குகள் லாபத்தை ஈட்டின.icici,Tcs,ITc,Tata motors ஆகிய நிறுவன பங்குகள் பெரிதாக சரிந்தன.அமெரிக்க சந்தைகளை பின்தொடர்ந்து,ஆசிய சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.ஜப்பான்,ஹாங்காங்,சீன பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியான தகவலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய அதிகளவில் பங்குகளை விற்றதும் இந்திய சந்தைகளில் நஷ்டத்தை பதிவு செய்தன. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவதும் இந்திய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடிப்பதும் பாதிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது.