3 டிரில்லியன் பணத்தை மறைத்து வைத்திருக்கிறதா சீனா?
உலக பொருளாதாரமே அண்மையில் ஆட்டம் கண்டிருந்த நிலையில் சீனா தன் வசம் 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணம் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர் பிராட் செட்ஸ்டர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சீனா பிராஜக்ட் என்ற பெயரில் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளார். எவ்வளவு பணம்தான் இருக்கிறது என்பதில் சீனாவிடம் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லை என்று கூறும் பிராட், இது உலகளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக நாடே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் சாலைகள் மற்றும் இணைப்பு கட்டமைப்புகளை சீனா மிகப்பெரிய அளவில் செய்து வருவதாக கூறியுள்ளார்.
மொத்தமாக 6 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணம் வைத்திருக்கும் என்று சீனாவை நிபுணர்கள் கணித்துள்ளனர். சேர்த்து வைத்துள்ள பதுக்கல் பணத்தை வெளியில் கொண்டு வந்தால் சீனாவின் உள்நாட்டு கடன் பிரச்னைகள் தீரும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது நிலைமை சரியில்லை என்று தகவல்கள் வெளியானாலும் உண்மையில் சீனா பல நாடுகளுக்கும் கடன் தரும் பெரிய நாடாகவே உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.