ஐரோப்பாவின் வளம் குன்றிய நாடாகிறதா ஜெர்மனி?
ஜெர்மனி நாட்டின் அதிபர் Olaf Scholz-ன் முன்பு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது அந்நாட்டு மந்தமான வளர்ச்சி,அதிக பணவீக்கம் மற்றும் உற்பத்தியில் பாதிப்பு.உற்பத்திக்கு பெயர்பெற்ற இந்த நாடு தற்போது தலைகீழாக மாறிப்போயுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மிகமுக்கியமான நாடுகளில் மிகவும் பின்தங்கியுள்ள ஒரே நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.அந்நாட்டில் ஆட்சியில் உள்ள 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு இந்த விவகாரங்கள் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அந்தநாட்டின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கிறது.இது பொருளாதார மந்த நிலையின் மிகமுக்கியமான அறிகுறியாகும். ஏற்றுமதி குறைவு மற்றும் தொழில்துறை பாதிப்பு ஆகிய இரண்டும் பொருளாதாரத்தின் மிகமுக்கிய இரண்டு அம்சங்களாகும். இதனால் தனது உற்ற தோழமை நாடான சீனாவுக்கும் கவலையை இந்த நாடு ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைனுடனான சண்டையால் எரிவாயு விநியோகம் ரஷ்யாவில் இருந்து தடைபட்டதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்நாட்டுக்கு மிகமுக்கிய பிரச்சனையாக மாறியிருப்பது ஆற்றல் துறைகள் மீதான விலையேற்றம் மட்டுமே.சோலார்,காற்றாலை உள்ளிட்ட துறை மின்சார உற்பத்திக்கு தற்போதைய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நீண்டகால உருமாற்ற திட்டம் தற்போது ஜெர்மனிக்கு தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜெர்மனியின் பொருளாதார நிலை என்பது 40 வயது நபர் போல உள்ளதாகவும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவேண்டிய சூழலில் இருப்பதாகவும் உள்நாட்டிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
1995-2004ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சூழலைவிட தற்போது நிலைமை வேறாக இருக்கிறது என்றும் மற்றொரு தரப்பு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தனியார் முதலீடுகள்,ஆட்கள் பற்றாக்குறையை அரசு சரி செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் மற்றொரு தரப்பு கம்பி கட்டி வருகிறது.