புதிய பிசினசில் கால் பதிக்கிறதா கோத்ரேஜ்..
கோத்ரேஜ் நிறுவனத்தில் கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனமும் பாஸ்டன் ஆளோசனைக்குழுவும் சேர்ந்து புதிய பிசினஸை தொடங்க இருக்கின்றனர். வளர்ச்சியை பிரதானப்படுத்தவே இந்த புதிய ஆயுதத்தை அந்த நிறுவனம் கையில் எடுத்துள்ளது. மும்பையில் மிகப்பெரிய அளவு நிலம் வைத்துள்ள அந்த நிறுவனம் 3ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை எப்படி பணமாக மாற்றுவது என்பதை பற்றி ஆலோசித்து வருகிறது. மும்பையில் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் என்பது பலோ கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இந்த நிறுவனத்தை ஜம்ஷைத் கோத்ரேஜும் நைரிகா ஹோல்கரும் நிர்வகிக்க உள்ளனர். கோத்ரேஜ் நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் 14 பிசினஸ்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கட்டுமானம், சுகாதார உபகரணங்கள், பர்னிச்சர் மற்றும் இன்டீரியர்கள் இதில் முக்கியமானவையாகும்ஆதி கோத்ரேஜ் நடத்தி வரும் கோத்ரேஜ் கன்சியூமர் புராடெக்ட்ஸ் 16,601 கோடி ரூபாய் வருவாயை கடந்த நிதியாண்டில் ஈட்டியுள்ளது. 595கோடி ரூபாய் இதில் லாபமாக கிடைத்திருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களை குறிவைத்து வணிகத்தை மேம்படுத்த கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் திட்டமிட்டு அதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 50 புதிய மாடல்களை நடப்பு நிதியாண்டில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்திய மின்சார சந்தையில் உதிரி பாகங்கள் விற்பனை தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை இரட்டிப்பாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.