ஐசிஐசிஐ லாபம் இவ்வளவு உயர்வா?
இந்தியாவில் தனியார் வங்கிகளில் மிகவும் பிரபலமானது ஐசிஐசிஐ வங்கி,தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிவேக வங்கி சேவை அளித்து வரும் இந்த வங்கிவாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற வங்கியாக உள்ளது. இந்தவங்கியின் 3-வது காலாண்டு வரவு செலவு கணக்கு அண்மையில் வெளியிடப்பட்டது.இதில் அந்த வங்கியின் 3-ம் காலாண்டு லாபம் மட்டும்34%உயர்ந்துள்ளது.குறிப்பிட்ட இந்த வங்கியின் மூன்றாம் காலாண்டில்மட்டும் நிகர லாபம் மட்டும் 8 ஆயிரத்து312 கோடி ரூபாயாக உள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.கடன் அளித்தல், சீரான வட்டி வசூலிப்பு உள்ளிட்ட அம்சங்களில் இந்தநிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 21.4% வளர்ந்துள்ளதுவங்கியின் வட்டி வருவாய் அளவு அதாவது Netinterest income மட்டும் 34.6%உயர்ந்துள்ளது.அதாவது முந்தைய நிகர வட்டி வருவாய் 12 ஆயிரத்து236கோடியில் இருந்து தற்போது இந்த விகிதம் 16 ஆயிரத்து465 கோடியாகஉயர்ந்துள்ளது.உள்நாட்டில் வட்டிக்கு கடன் வாங்குவோர் விகிதம் 21 %அதிகரித்துள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளதுவாராக்கடன் விகிதம் 3.90ல் இருந்து தற்போது3.07%ஆக சரிந்துள்ளதுநல்ல வளர்ச்சி பெற்றுள்ள இந்த வங்கியின் பங்குகளை வாங்கலாமா கூடாதாஎன்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன்படி அடிப்படை விலை ரூ.ஆயிரத்து 90 வந்தால் அதற்கு மேல் வாங்குவதுஉகந்தது அல்ல என்றும் ஆயிரத்து 150ரூபாய் வரும் வரை தாராளமாக வாங்கலாம்என்றும் நிபுணர்கள் இருவேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்கிட்டத்தட்ட 5-ல் 4 பேர் ஐசிஐசிஐ பங்குகளை வாங்குவதில் எந்த தயக்கமும்வேண்டாம் என்றே தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் சீரான வளர்ச்சி உள்ளதால்இந்த பங்குகள் வாங்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.நிபுணர்கள் கூறும் கருத்துகள் மட்டுமே இங்கே பதிவிடப்படுகிறது, முதலீடுசெய்வது தனிநபர் விருப்பம் என்பதையும் அவரவர் எடுக்கும் ரிஸ்க்குக்குஅவர்களே பொறுப்பு என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய விஷயமாகும்.