இவங்கள வச்சுக்கிட்டு நிம்மதியா ஒரு தொழில் பண்ண முடியுதா???
காய்கனி முதல் கணினி வாங்கும் வரை தற்போது மக்கள் பரவலாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டே தொழில்நுட்ப சேவையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. எனினும் அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகள் இத்தனை ஆக்டிவாக இல்லை என்ற நிலைதான் இருந்தது ஆனால் ரிசர்வ் வங்கியும் என்பிசிஐ அமைப்பும் இணைந்து உருவாக்கிய யுபிஐ சேவைக்கு மூன்றாம் நபர் செயலிகள் அமோக வரவேற்பு அளித்துள்ளன. கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் தான் யுபிஐ பரிவர்த்தனைகளில் 90% பங்களிப்பை தருகின்றன இந்த சேவை தற்போது வரை இலவசமாக அளிக்கப்பட்டு வரும் நிலையில் வருங்காலங்களில் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது பணம் அனுப்பவோ, கடைகளில் பொருட்களை வாங்கவோ, யுபிஐ சேவையை பயன்படுத்தினால் அதற்கும் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருக்கிறது. 2024ம் ஆண்டு வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி யுபிஐ சேவை இலவசம் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் வங்கிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி பிற சேவைகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். விரைவில் யுபிஐக்கு கட்டணம் வசூலிப்பதா வேண்டாமா என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.