தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?
செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையை விட 20 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5510 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 44ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77 ரூபாயாக சரிந்து இருக்கிறது. இதுவே கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 77 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை பெரிய அளவில் ஏற்ற , இறக்கம் இல்லாமல் இருந்து வருகிறது. எதிர்வரும் பண்டிகை நாட்களில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் தங்கத்தை வாங்கி வைக்க இதுவே சரியான நேரமாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இங்கே குறிப்பிட்ட விலைகளுடன் 3%ஜிஎஸ்டியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்காமல் உள்ளது. அவற்றை சேர்த்தால்தான் இறுதி விலை தெரியவரும். செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள், குறைவான செய்கூலி,சேதாரம்,அதேநேரம் தரத்தில் குறைவில்லாத தங்கம்,வெள்ளி விற்கும் கைராசி கடைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.