கோ ஃபர்ஸ்டை வாங்குகிறதா ஸ்பைஸ்ஜெட்?
ஸ்பைஸ்ஜெட், சார்ஜாவைச் சேர்ந்த ஸ்கை ஒன் மற்றும் ஆப்ரிக்காவை மையப்படுத்தும் சாப்ரிக் என்ற முதலீட்டு நிறுவனங்கள், திவாலான கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியிருக்கிறது. அண்மையில் அடுத்தடுத்த தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானங்களை இயக்க முடியாத காரணத்தால், திவால் நோட்டீஸை நீட்டியது கோஃபர்ஸ்ட் நிறுவனம். இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண காலக்கெடுவை நிர்ணயிக்கவும், கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்தது. வாடியா குடும்பத்தைச் சேர்ந்த கோஃபர்ஸ்ட் நிறுவனம் கடந்த மே மாதம் திவால் நோட்டீஸ் அனுப்பினர். அமெரிக்க நிறுவனம் விமான இஞ்சின்களை பழுதுநீக்கித் தராததால் , இந்த திவால் சிக்கலை கோஃபர்ஸ்ட் நிறுவனம் சந்தித்து இருந்தது. ஆனால் ஏற்கனவே போதுமான பிரச்சனைகளுடன் வலம் வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்கவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம்தான் 2250 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்திருந்தது. 32 கோடி ஈக்விட்டி பங்குகளை விநியோக விலையாக 50 ரூபாய்க்கு விற்பதாகவும் ஏற்கனவே கூறியிருந்தது. ஏற்கனவே கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருந்தவர்கள் அனைவரும் கூடி பேசி, அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுக்க இருக்கின்றனர்.
கோஃபர்ஸ்ட் விற்பனைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ள தரவுகள் பங்குச்சந்தைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
சுமார் 20 விழுக்காடு வரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்றத்தை கண்டுள்ளன.ஒரு ஸ்பைஸ்ஜெட் பங்கின் விலை 64 .07 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்தின வர்த்தகத்தைவிட கணிசமான உயர்வாகும்.