சீன நிறுவனத்தை வாங்குகிறதா டாடா?
விவோ நிறுவனம் உண்மையில் சீன தயாரிப்பாகும். பிபிகே குழுமம் இந்தியாவில் இந்த செல்போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் டாடா குழுமத்தின் தலைமையில் உள்ள அதிகாரிகள், பிபிகே குழுமத்தின் பங்குகளில் பெரும்பகுதியை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது டாடா குழுமம் சொல்லும் பணத்தை விட விவோ நிறுவனம் அதிகம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் விவோ செல்போன் நிறுவனத்தை வாங்குவதில் டாடா நிறுவன அதிகாரிகள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனராம். அண்மையில் விவோ, ஓப்போ ஆகிய சீன தயாரிப்பு செல்போன் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக ரெய்டுகளும் நடந்தன. இந்த நிலையில் இந்தியாவில் ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் ஓப்போ நிறுவனம் தனது பங்குகளை கைமாற்றிவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் இந்திய தயாரிப்புகள் தேவைப்படுவதாக இந்திய அரசு தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் இந்திய பிரிவை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஆலை டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ளது. இந்த ஆலையில் விரைவில் உற்பத்தியும் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆட்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். எனினும் அரசாங்க ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. அண்மையில் தைவானைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள டாடா நிறுவனம் மின்சாதன பொருட்கள் உற்பத்தியில் தனித்துவம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சீன நிறுவனத்தின் இந்திய ஆலையை அப்படியே டாடா குழுமம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது