பங்குகளை திரும்ப வாங்குகிறதா டிசிஎஸ்..?
இந்திய அளவில் மிகப்பெரிய டெக் நிறுவனமாக திகழ்கிறது டிசிஎஸ் நிறுவனம்.இந்த நிறுவனத்தில் ஏற்கனவே வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.வரும் 11ஆம் தேதி இது தொடர்பான இயக்குநர்களின் குழு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறதாம். இது மட்டுமின்றி செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டதத்தில் கிடைத்த வருவாய் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.இந்த முறை பங்குகளை திரும்ப வாங்கிக்கொண்டால் அந்த நிறுவனத்தில் இப்படி நடப்பது இது 5ஆவது முறையாகும். கடந்தாண்டு ஜனவரியில் டிசிஎஸ் தனது பங்குகளை , 18ஆயிரம் கோடி ரூபாய்க்கு திரும்ப வாங்கிக்கொண்டது. ஒரு பங்கின் விலை 4ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் வாங்கப்பட்டது.
கடந்த 18 மாதங்களில் டிசிஎஸின் பங்குகள் விலை 11%உயர்ந்திருக்கிறது.ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர பணப்புழக்கம் 11ஆயிரத்து353 கோடி ரூபாயாக இருக்கிறது.இது மொத்த வருமானத்தில் 102.5% வருவாயின் பகுதியாகும்.