விண்ட்ஃபால் வரி இவ்வளவு உயர்வா?
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த வரி ஒரு டன்னுக்கு கடந்தத மாதம் வரை 4,900 ரூபாயாக இருந்தது, இது தற்போது 6,800 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. புதிய வரி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அமலாகிறது. சிறப்பு கூடுதல் கலால் வரி என்ற பெயரில் இந்த வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வகை கச்சா எண்ணெயில் , பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள்களுக்கு ஏற்றுமதி வரி 0 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்த விண்ட்பால் வரியை ஒரு டன்னுக்கு 300 ரூபாய் உயர்த்தியது. அதாவது 4,600 ரூபாயாக இருந்த வரி, கடந்த 15 ஆம் தேதி 4,900 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த 2022 ஜூலை முதல் இந்தியாவில் விண்ட்ஃபால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்ளூரில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் இந்தியாவிற்குள்ளேயே விற்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கவும் இந்த வரியை மத்திய அரசு கொண்டுவந்தது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை இந்த வரி மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த அடிப்படையில் தற்போது விண்ட்ஃபால் வரி கணிசமாக உயர்ந்திருப்பது, தனியார் நிறுவனங்களை கலங்க வைத்திருகிறது.