பொருளாதாரத்துக்கும், உள்ளாடைக்கும் சம்பந்தம் இருக்கா??? என்னங்க சொல்றீங்க….
பொருளாதாரத்துக்கும் ஆண்களின் உள்ளாடைக்கும் தொடர்பு இருக்கும் என்று அமெரிக்காவின் பெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவராக இருக்கும் ஆலன் கிரென்ஸ்பான் தெரிவிப்பார். இந்த துறையின் விற்பனை எப்போது சரிகிறதோ உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாக அர்த்தம் என்பது அவரின் கூற்று. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் முன்னணி உள்ளாடை நிறுவனங்களின் விற்பனை கடந்தாண்டின் கடைசி மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. சரியாக சொல்லப் போனால் ஆண்களின் உள்ளாடை விற்பனை 55% சரிந்துள்ளது. இந்தியாவில் ஜாக்கி, லக்ஸ், ரூபா ஆகிய நிறுவன உள்ளாடைகள் 55% விற்பனை சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார மந்தநிலை சரிஇல்லை என்பதை உள்ளாடை சந்தையும்,லிப்ஸ்டிக் சந்தையும் தெள்ளத்தெளிவாக கூறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2007 முதல் 2009ம் ஆண்டு வரை பொருளாதார சரிவு ஏற்பட்டபோது முதல் அறிகுறியாக உள்ளாடை விற்பனைதான் சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2019ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு வரை 6பில்லியன் டாலர் அமெரிக்க வர்த்தகம் கொண்டிருந்த உள்ளாடைத் துறை 2020-ல் 4.5 பில்லியன் டாலராக சரிந்தது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த சந்தை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்