இது என்ன முயூசிகல் சேரா?
உலகின் பெரிய பணக்காரர்கள் யார் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.இந்த நிலையில்அண்மையில்தான் எலான் மஸ்க் தனது முதலிடத்தை மீண்டும்பிடித்தார் என்று செய்தி வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 187 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துமதிப்பு கொண்டிருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அண்மையில் 2 பில்லியன் டாலர் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவன பங்குகள் 5 விழுக்காடு சரிவை சந்தித்த அதே நேரம் மஸ்கின் சொத்துமதிப்பும் சரிந்துள்ளது. 200 பில்லியன் டாலர்கள் ஒரே ஆண்டில் இழந்த கின்னஸ் உலக சாதனையை படைத்த எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் இரண்டாம் இடம் என்று ஊசலாட்டத்துடன் உள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய போது இருந்த சொத்துமதிப்பை விட தற்போது நிலைமை எவ்வளவோ முன்னேறியுள்ளதாகவும்,நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய மஸ்க் , மீண்டும் முதலிடத்தை பிடிக்க பெரிய முயற்சிகளை செய்யவில்லை. இழந்த பணத்தை மஸ்க் மீண்டும் கிடைத்துவிட்டது ஆனால் ஊழியர்களின் குடும்பங்களை ஏன் மஸ்க் நினைத்துப்பார்க்கத் தவறிவிட்டாரோ தெரியவே இல்லை…