நேரடி வரியாக இவ்வளவு தொகை வசூலா?
ஒரு தேசத்துக்கு பாதுகாப்பு எத்தனை முக்கியமோ அதைவிட நிதி ஆதாரம் மிகமிக முக்கியமாகும்.அனைத்து துறை கட்டமைப்புகளையும் செய்ய ஒரு நாட்டின் நிதிதான் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த நிலையில் தேசத்தை கட்டமைக்கும் நிதி ஆதாரமாக திகழ்வது நேரடி வரிகள்.கடந்த 17ம் தேதி நிலவரப்படி தேசத்தின் நேரடி நிகர வரி 11 லட்சத்து 35 ஆயிரத்து 754 கோடி ரூபாயாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிடவும் பல மடங்கு கூடுதலாகும். இதே காலகட்டத்தில் அதாவது டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டில் வெறும் 9 லட்சத்து 47 ஆயிரத்து 959 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. கார்ப்பரேஷன் வரியாக மட்டும் 6 லட்சத்து 06 ஆயிரத்து 679 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர்களிடம் இருந்து வருமான வரியாக மட்டும் 5 லட்சத்து 26ஆயிரத்து 477 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்த வரியாக நேரடியாக 13 லட்சத்து 63 ஆயிரத்து 649 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. நிதி ஆதாரம் என்பது வளர்ச்சிப்பணிகளுக்கு பெரிதும் உதவும் பிரம்மாஸ்திரம் என்றால் அது மிகையல்ல..