இப்படியுமா சிக்கனம் செய்வாங்க???
சீ லிமிடட் என்ற நிறுவனம் வணிக செயலி, வீடியோ கேம்கள், மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் கால்பதித்து நன்கு வளர்ந்து வந்தது. இந்த சூழலில் கொரோனா காலகட்டத்தில் நிறுவனத்தின் நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கழிவறையில் உள்ள காகிகதங்கள் கூட இரண்டுக்கு பதிலாக ஒரு மடிப்பாக குறைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனர் பாரஸ்ட் லீ, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் 7ஆயிரத்து 500க்கும் அதிகமான பணியாளர்களை இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களில் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தியதின் மூலம் கணிசமான தொகை மிச்சமாகியுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 14 ஆண்டுகளில் முதன் முறையாக தேவையற்ற செலவுகளை தடுத்தால் அந்த நிறுவனம் 427 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை சேர்த்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை கடுமையான கட்டுபாடுகள் இருந்த நிலையில் மெல்ல மெல்ல அந்த நிறுவனம் லாபத்தை பதிவு செய்து வருகிறது. சிங்கப்பூரில் இந்த நிறுவனம் தற்போது பெரிய லாபத்தை பதிவு செய்தது. மின்னணு வணிகத்தில் சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.