இது வரி பயங்கரவாதம்தானோ..??
இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் தனது கிரிடிட் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்தினால் எல்ஆர்எஸ் முறைப்படி, 20 வழிக்காடு டிசிஎஸ் வரி விதிக்க அரசு அண்மையில் திட்டமிட்டுள்ளது. இது விரைவில் அமலகாவும் இருக்கிறது. கடந்த 2014-ல் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி இத்தகைய பெரிய வரிகளை வரி பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் மறைவுக்கு பிறகு நிதியமைச்சர் பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமன், இந்த 20விழுக்காடு வரி விதிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதனை சுட்டிக்காட்டியுள்ள மோகன்தாஸ் பை, வெளிநாட்டில் பணம் செலுத்துவோரில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் செலவு செய்கின்றனர் என்றும், இது எந்தளவு சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி நிதியமைச்சரிடம் கேட்டபோது, தேவையற்ற செலவுகள்தான் வெளிநாடுகளில் செய்யப்படுவதாகவும், 18முதல் 20 பில்லியன் அளவுக்கு நிதி இந்த வகையில் செலவிடப்படுவதாகவும் நிதியமைச்சர் கூறியதுடன், வெளிநாடுகளில் செய்யப்படும் இந்த வகை செலவுகளுக்கு உரிய வரி கிடைப்பதில்லை என்பதால்தான் இதை கொண்டுவருவதாக நிதியமைச்சர் கூறினார். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியும் அரசு அதிகாரிகள் செவிமடுக்கவில்லை என்றும் மோகன்தாஸ் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக்கு சென்று செலவு செய்யும்போது இந்தியர்களை அரசாங்கம் பாதுகாக்கவேண்டுமே தவிர்த்து அதற்கு நேர் எதிராக தற்போதைய வரிவிதிப்பு உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், 7 லட்சம் வரை வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு முதல் செலவு செய்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.