எல்ஐசிக்கு இந்த நிலையா???
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ளது எல்ஐசி நிறுவனம்,இந்த நிறுவனத்தின் முதல் முதன்மை செயலாளரை தனியார் வசமிருந்து எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசு வசமுள்ள எல்ஐசி நிறுவனத்தில் சில குறிப்பிட்ட விகித பங்குகளை பங்குச்சந்தையில் விற்றதன் மூலம் அதன் மீதிருந்த நன்மதிப்பு குறைந்து வரும் சூழலில் இந்த முடிவை எல்ஐசி நிறுவனம் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே இத்தகைய பெரிய பதவி யாருக்கும் அளித்ததில்லை ஏனெனில் 500 பில்லியன் டாலர் பணத்தை எப்படி நிர்வகிப்பது என்று தனிநபர் எடுக்கும் முடிவு மிகமிக முக்கியம் என்பதால் இந்த பதவி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 66 ஆண்டுகள் வரலாற்றில் இதுபோல ஒரு தனி நபரை எல்ஐசியை நிர்வகிக்க தேர்வு செய்வது இதுவே முதன்முறையாகும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் நபரை தனியாரில் இருந்து எடுக்கும் வகையில் கடந்தாண்டு விதி மாற்றி அமைக்கப்பட்டது. தனிநபர் அரசு காப்பீட்டு பணத்தை நிர்வாகம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று ஒரு தரப்பும், இது சரியான முடிவு என மற்றொரு தரப்பும் கருத்துகளை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். இந்த பதவியில் யாரை அமர வைப்பார்கள் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.