இந்திய சந்தைகள் சரிய இதுதான் காரணமா?
இந்திய சந்தைகள் சரிய மிகமுக்கிய காரணமாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் பார்க்கப்படுகிறது.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கவே விரும்பவதால் இந்த சரிவு காணப்படுகிறது. விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு,டாலர் வலுவடைந்து வருவது உள்ளிட்ட காரணிகளால் இந்திய சந்தைகள் சரிந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் அதிகம் இருக்கிறது. இவர்கள் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா இல்லை ஹமாஸுக்கு ஆதரவா என்ற பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்து வருவதை அந்நாட்டு டாலர் குறியீடு மூலம் தெரிந்துகொள்ள இயலும் இந்த மதிப்பு கடந்த வாரம் 106புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெயை 85விழுக்காடு இந்தியா இறக்குமதி செய்வதால் அதுசார்ந்த விலைவாசியும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. சந்தையில் போட்ட பணத்தை எடுத்து அதனை தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களால் சந்தையில் பாதகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதும் இந்திய சந்தைகள் வீழ்ச்சியை காண முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
ஐசிஐசிஐ,கோடக் மஹிந்த்ரா பங்குகள் சிறப்பாக அமைந்தன.ஆனால் பல நிறுவனங்கள் எதிர்பார்த்த லாபத்தை பதிவு செய்யவில்லை.இதுவும் சந்தை மோசமாக சரிய முக்கிய காரணியாக கூறப்படுகிறது.