சந்தைகள் சரிய இதுதான் காரணமா?
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக சரிந்தன.இது குறித்து பங்குச்சந்தை நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய முக்கிய காரணிகளை நாங்கள் பட்டியலிடுகிறோம்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அதிகளவில் விற்பது முதல் காரணமாகும்.அமெரிக்க டாலர் மீண்டும் வலுப்பெற்று வருவதும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நிலைப்பாட்டை வலுவாக்குவதும்,கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்த சரிவுக்கு முக்கியமான காரணிகளாக கூறப்படுகிறது.சேமித்து வைத்த பணத்தை டாலர்கள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடுகளாக முதலீட்டாளர்கள் மாற்றி வருகின்றனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சிலநாட்களில் மட்டும் 3,110 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் பங்குகளை விற்றுள்ளனர். பங்குகளை வாங்க விரும்பினால் தற்போதே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், வருங்காலங்களில் விலை ஏறவும் வாய்ப்பு உள்ளதாகவும் முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தங்கம், தங்க ETF,ஈக்விட்டிகள் ஆகியன அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.கடந்த சில வாரங்களாக புதிய உச்சங்களை தொட்டு வந்த இந்திய சந்தைகள் மீண்டும் சரியத் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் இருந்த நிலையில் தற்போது நிலை மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வங்கித்துறை பங்குகள் அதிகளவுக்கு ஏற்றம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்ப்போம்.