அமெரிக்க பணவீக்கம் உண்மையில் குறைகிறதா?
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அமெரிக்க பணவீக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கு தகுந்தபடி பணவீக்கம் உடனடியாக குறையாது என்று தெரிவித்துள்ளது.வரும் நாட்களில் சந்தை சூழலுக்கு தகுந்தபடி பணவீக்கம் குறையலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உண்மையில் சுகாதாரத்துறையில் உள்ள பணவீக்கத்தை சந்தையில் மக்கள் கருதுவதில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர்கிறது. மேலும் இந்தாண்டில் இரண்டு முறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. சந்தை மதிப்பில் தற்போது உள்ள சூழலை ஒரு வருடம் முதலீடு செய்வது உகந்தது என்றும் புளூம்பர்க் அறிக்கை தெரிவிக்கிறது.