அம்மையார் சொல்வது உண்மையா?!!!!
நிதிபற்றாக்குறையை சமாளிக்கும் அளவுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும், நித பற்றாக்குறையும் பட்ஜெட்டில் உள்ள அதே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் பணவீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி நிதிநிலை அறிக்கையை அம்மையார் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்2021-22 நிதியாண்டில் இருந்த பட்ஜெட் மதிப்பீட்டை விடவும்,2022-23 நிதியாண்டில் 35%அதிக பட்ஜெட் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளிலேயே மிகச்சிறப்பான வளர்ச்சிகொண்ட நாடாக இந்தியா உள்ளது. எனினும் உலகளவில் நிலவும் நிலையற்ற சூழல் இந்தியாவையும் பாதிக்கிறது. கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுக்கொண்டே வரும் சூழலில், அடுத்த நிதியாண்டு துவக்கத்தில் வட்டி விகித உயர்வு நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் போதிய பலன்கள் கிடைத்து வருவதால் , 2025-26ம் ஆண்டு நிதி பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்து 4.5%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.