இஷா அம்பானிக்கு நிதி நிறுவனத்தில் பதவி…
ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து அண்மையில் பிரிந்த நிதி நிறுவனம் தனியாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு ஜியோ பினான்சியல் சர்வீசஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக, பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. இஷா அம்பானியுடன்,அன்சுமான் தாகூர்,ஹிதேஷ் குமார் சேதியா உள்ளிட் 3 பேருக்கும் இயக்குநர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கியதில் இருந்து 6 மாத காலத்துக்கு இந்த பதவி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு வர்த்தக நேர முடிவில் 0.6%உயர்ந்திருக்கிறது.மும்பை பங்குச்சந்தையான BSEயில் இந்த நிறுவன ஒரு பங்கின் விலை 225.60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில்,101% PAT உயர்ந்து 668 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதில் டிவிடண்ட் வருமானம் மட்டும் 371 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை 1லட்சத்து 19 ஆயிர்தது 598 கோடி ரூபாயாக இருக்கிறது