இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு????
PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணையும்,ஆதாரையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு பலமுறை அவகாசம் அளித்துப்பார்த்துவிட்டது. ஆனால் எதர்க்கும் அசராத சிலரோ பான் கார்டு எண்ணை இணைக்காமலேயே உள்ளனர். ஆமாம் பான்கார்டு எண்ணையும்-ஆதாரைுயும் இணைக்க வேண்டியது அவசியம் ஏன் என்றால்,மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஆதாரும்-பான் எண்ணும் இணைக்கப்படவில்லை என்றால் அது முற்றிலும செயலிழந்துவிடும் என்று கூறப்படுகிறது. அசாம், ஜம்முகாஷ்மீர்,மேகாலயா உள்ளிட்ட பகுதி மக்கள் மட்டும் இந்த இணைப்பை தற்போது பெற முடியவில்ல என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாரையும்-பேன்கார்டையும் இணைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆதாரையும் பேன்கார்டையும் இணைக்காவிடல் என்ன என்ன செய்ய முடியாது என்பதை பட்டியிலில் பார்க்லாம்.
*வாகனங்களை விற்கும்போதும்,வாங்கும்போதும் பான்கார்டு அவசியமாகிறது.
- வங்கிக்கணக்குகள் துவங்க முடியாது
- டீமேட் கணக்குகள் தொடங்க முடியாது
- பான்கார்டு இல்லையெனில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் யாருக்கும் அனுப்ப முடியாது.